Tamilவிளையாட்டு

ஆஷஸ் தொடரில் வார்னர், ஸ்மித் ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும் – டிம் பெய்ன்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னிலும், இன்றுடன் முடிவடைந்த 2-வது டெஸ்டில் 366 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது.

கடந்த ஆஷஸ் தொடருக்குப்பின் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்த ஆஸ்திரேலியாவிற்கு இந்த வெற்றி சிறுது நம்பிக்கையளித்துள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித் மீதான ஓராண்டு தடை அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அவர்கள் இருவரும் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரின்போது அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

அவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வரவேற்க தயாராக உள்ளது. இந்நிலையில் இலங்கை தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் டிம் பெய்ன், வரவிருக்கும் ஆஷஸ் தொடரின் வெற்றியில் ஸ்மித், வார்னர் ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் “நீங்கள் விரும்புவது போல் இருவரும் அணிக்கு திரும்பி அதிக ரன்கள் குவிப்பார்கள். நாங்கள் ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து செல்லும்போது, அந்த தொடரின் வெற்றியில் இருவருடைய ஆட்டமும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதாக நான் பார்க்கிறேன். இதனால் அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்.

அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தடை முடிந்த பிறகு அணிக்கு வரவேற்கப்படுவார்கள். கடந்த காலத்தை போன்று மீண்டும் அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *