நெஞ்சில் குத்திய டாட்டூ! – மீண்டும் வைரலாகும் பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீசாகிறது.
தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். பிரியா வாரியரின் கண்ணசைவை தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலம் அடைந்துள்ளது. ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்’ என்பது அதன் அர்த்தம்.
இதுதவிர இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும் பிரியா வாரியர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.