Tamilவிளையாட்டு

மாநில டி20 போட்டிகள் மூலம் வீரர்களை தேர்வு செய்து ஐபிஎல் அணிகள் பணத்தை வீனடிக்கின்றன – சுனி கவாஸ்கர் குற்றச்சாட்டு

இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் டி20 லீக்குகளை நடத்துகின்றன. இந்த ஆண்டு முதல் டெல்லி கிரிக்கெட் சங்கம் டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக்கை ஆரம்பித்திருக்கிறது. இந்த டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேவையில்லாமல் ஐபிஎல் முதலாளிகள் பணத்தை வீணடிக்கிறார்கள் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

மேலும் இப்படியான மாநில டி20 லீக்குகளில் தரம் மற்றும் வரவேற்பில் டிஎன்பிஎல் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உத்திர பிரதேஷ் டி20 லீக்கில் ஒரே தொடரில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய் கொடுத்து கடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. ஆனால் அவரால் பெரிய அளவில் ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து வரக்கூடியவர்கள் இந்திய முதல் தரப் போட்டிகளில் விளையாடும் பொழுது தடுமாறுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அண்டர் 19 அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களால் முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாட முடிவதில்லை.

இதேபோல மாநில டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் சையத் முஸ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பதற்கு ஐபிஎல் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது. இது நல்ல ஒரு யோசனை கிடையாது.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் சீசன் துலீப் டிராபி உடன் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்காக விளையாடும் பல வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்பது மிகவும் நல்ல விஷயம் .வீரர்களைக் கண்டறிவதற்கு இதுதான் மிகச்சிறந்த வழி. இங்கு பேட் மற்றும் பந்துவீச்சின் சிறப்பாகசெயல்படக்கூடியவர்களை அடுத்து இந்திய அணிக்கு கொண்டு செல்லலாம்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.