இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகல்
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
தசைப்பிடிப்பால் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார். துணை கேப்டன் பொறுப்பு ஹாரி புரூக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் ஓராண்டுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.
இங்கிலாந்து அணி வருமாறு:-
டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், அட்கின்சன், மேத்யூ போட்ஸ், மார்க்வுட், சோயிப் பஷீர்.