ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்த ஷர்மிஷா
அடுத்தடுத்து பதவிகளைத் துறக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களால் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒருபுறம் உடன்பிறந்த அண்ணனையும், மறுபுறம் தெலுங்கு தேசம் கட்சியையும் தீவிரமாக விமர்சித்து அதிரடி காட்டி வருகிறார் ஷர்மிளா.
இந்நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிளா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-
முன்னாள் முதல் மந்திரியாக இருந்த ஜெகன்மோகன், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கொடுத்தால்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று கூறுவது அவரது அறியாமைக்கு சான்று. உங்களுக்கு வாக்களித்த மக்களை அவமதிக்க நீங்கள் தகுதியானவர்.
மக்கள் உங்களை எம்.எல்.ஏ. ஆக்கியது அரண்மனையில் உட்கார வைக்க அல்ல., அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் கேள்வி கேட்கும் பொறுப்பு உங்களுக்கு இல்லையா? என்றும், சட்டசபைக்கு போகமாட்டேன் என்றும் சொல்லும் நீங்கள், எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு மட்டுமல்ல எம்.எல்.ஏ., பதவிக்கும் தகுதியற்றவர் என ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் தீர்ப்பை மதிக்காமல், சட்டசபைக்கு செல்லமாட்டேன் என்று கூறி, சட்டசபையை அவமதித்தவர்கள். எம்.எல்.ஏ.,வாக இருக்க தகுதியற்றவர்கள். ஆதலால், எம்.எல்.ஏ. பதவியை ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஷர்மிளா கூறியுள்ளார்.