சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோவை நீதிமன்றம்
யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார். இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.