Tamilசினிமா

புதிய வீடு கட்டி குடியேறிய நடிகை நயன்தாரா!

கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சினிமாவை தாண்டி தொழில் அதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் நயன்தாரா இடம் வாங்கி வீடு கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் பரவியது. தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் புதிய வீட்டில் நயன்தாரா குடியேறி இருக்கிறார். வீட்டின் முன்னால் எடுத்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவை வைரலாகின்றன.

புதிய வீட்டுக்கு சென்ற நயன்தாராவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா தற்போது தி டெஸ்ட், மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.