கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ பட டிரைலர் இன்று மாலை வெளியாகிறது
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கதறல்ஸ்’ மற்றும் ‘பாரா பாரா’ என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்பாக இன்று காலை சென்னை நிகழ்வில் இந்தியன் 2 படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியன் முதல் பாகம் எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ இப்பாகமும் அதேப் போல வெற்றியடையும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.