ரூ.55 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஆடம்ப பங்களா! – நடவடிக்கை எடுக்க தயாராகும் சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்று 4-வது முறையாக ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரச்சனைகளும் வரிசை கட்டி இருக்கிறது.
கடந்த 15-ந்தேதி, தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டில் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனை போன்ற பங்களாவை ஜெகன்மோகன் கட்டி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.
இந்த பங்களா தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பகிர்ந்து, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. கண்ணாடிகள், கிரானைட்கள் என மிக பிரம்மாண்டாக கட்டப்பட்டுள்ள பங்களாவில் பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பங்களாவை அரசின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி மறுபடியும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும் தேர்லுக்கு பின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.