பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது – தேர்தல் ஆணையத்திடம் திமுக, காங்கிரஸ் புகார் மனு
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 30) ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் என இரண்டு நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.