Tamilசினிமா

‘அரண்மனை 4’ வெற்றியை தொடர்ந்து ‘கலகலப்பு 3-க்கு ரேடியாகும் இயக்குநர் சுந்தர்.சி

இயக்குநர் சுந்தர் சி இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான படம் அரண்மனை 4. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி ரிலீசான அரண்மனை 4 படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கலகலப்பு மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என்று தெரிகிறது.