Tamilசெய்திகள்

அருவிகளில் குளிக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை காரணமாக திடீர் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.