Tamilசெய்திகள்

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.

* எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

* ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பெரும் வெற்றி பெறும், எனவே ஓபிஎஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை.

* அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவை சேர்ப்பது போன்ற பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள்.

* வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும். அப்போது கோவை மாவட்டத்திற்கு விடுபட்ட திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம் என்று கூறினார்.