தமிழகத்திற்கு வர வேண்டிய 16 ஆயிரம் கோடியை தர மத்திய அரசு மறுக்கிறது – தம்பி துரை புகார்
மக்களவை சபாநாயகரும், அதிமுக எம்பி-யும் ஆன தம்பிதுரை இன்று திருவிடைமருதூரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “பா.ஜனதாவும், அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொதுக்குழு, செயற்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.
தமிழகத்திற்கு வர வேண்டிய 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்திற்கான பல்வேறு சலுகைகள் வழங்க மத்திய அரசு மறுப்பதால் உரிமையுடன் கேட்டு வருகிறேன். தனிக்கட்சி தொடங்கும அளவுக்கு எனக்கு தகுதியில்லை” என்றார்.