Tamilசெய்திகள்

கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை – விசாரணையில் தகவல்

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவு மோசமடைந்தது. கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) 2021-ம் ஆண்டின் தேர்தலின்போது காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்கள் அதிகம் இருக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்துள்ளது. தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதற்கிடையே, தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடா பிரதமர் ட்ரூடோ ஒரு குழுவை அமைத்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது. மூத்த அதிகாரிகள் குழுவிடம் வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2021 தேர்தலின்போது இந்திய அரசு தனது செல்வாக்கை பிரசாரத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் தகவலை நம்பவில்லை என விசாரணைக் குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.