Tamilசெய்திகள்

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது – சென்னை மெரோ ரெயில் அறிவிப்பு

பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. இதனால் சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக க்யுஆர் குறியீடு, வாட்ஸ்அப், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையான ஆன்லைன் முறைகளில் பயணச்சிட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தடைபட்டது. இதனால் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலைய நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணத்தை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நிர்வாகம் சிஎம்ஆர்எல்-ல் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.