மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் கார்த்தியின் ‘பையா’
லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா , ஜெகன் ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது. இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.