Tamilசெய்திகள்

தேர்தல் முடியும் வரை கட்டாய நடவடிக்கை எடுக்காது – நிம்மதியடைந்த காங்கிரஸ்

வருமான வரி தாக்குதலில் தவறு செய்ததான காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம், வட்டி என சுமார் 3500 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரி தீர்ப்பாயம் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கியது. இதனால் தேர்தல் நேரத்தின்போது தங்களால் பணம் எடுக்க சிரமமாக உள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் எந்த தடையும் பிறப்பிக்கவில்லை.

இதனால் உச்சநீதிமன்றததை நாடியது. அப்போது இது வரி தீவிரவாதம். மக்களவை தேர்தலின்போது பணத்தை எடுக்க முடியாத வகையில் முடக்குவதற்கான முயற்சி என குற்றம்சாட்டியது. இது தேர்தலில் சமநிலையை பாதிக்கும் எனவும் தெரிவித்தது.

இந்த வழக்கு பிவி நாகரத்னா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய சொலிட்டர் ஜெனரல், தேர்தல் முடியும் வரை கட்டாய நடவடிக்கை எடுக்காது எனத் தெரிவித்தார்.

2024-ல் 20 சதவீதம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 135 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. 1,700 கோடி ரூபாய் கட்டுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். அதன்பின் 1,700 கோடி ரூபாய் கட்ட வலியுறுத்தப்படும். ஒட்டுமொத்த விசயங்களும் தேர்தலுக்கு பின் சரி செய்யப்படும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்” என்றார்.

மத்திய அரசு வரி கட்டுவதற்கு ஏதேனும் இடைக்கால தடைவிதிக்கிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, “அப்படி ஏதும் இல்லை. தேர்தல் வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதை மட்டும் தெரிவிக்கிறோம்” என்றார்.