தெலுங்கானாவில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரிகளாக ஆக்குவேன் – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உறுதி
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.
உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.
தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.
பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.