மேற்கு வங்காலம் சந்தேஷ்காளி பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
மேற்கு வங்காளம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்றச் செயலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த ஷேக் ஷாஜகான் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களின் சொத்துகளை அபகரித்தல், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம், அரசு நலத்திட்ட நிதிகளை பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளை அங்குள்ள பெண்கள் இவர் மீது முன்வைத்தனர்.
மேலும், வீதிகள் இறங்கி ஆயுதங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் திரணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது, அவர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஷேக் அகமது கைது செய்யப்பட்டார். அவரை மத்திய அமைப்பினர் ஒப்படைக்க மேற்கு வங்காள போலீசார் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஷேக் ஷாஜகானுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேஷ்காளியின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஷேக் ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என அம்மாநில ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.