Tamilவிளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது ஆப்கானிஸ்தான்

அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான்- நூர் அலி சத்ரன் களமிறங்கினர். நூர் அலி சத்ரன் 7 ரன்னிலும் அடுத்து வந்த ரஹமத் 0 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான் – ஷாஹிதி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.

20 ரன்கள் எடுத்த போது ஷாஹிதி அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் சத்ரான் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசி வரை கரீம் ஜனத் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து அயர்லாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் சத்ரன், ஜியா-உர்-ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.