Tamilசெய்திகள்

ஆர்டிக் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஜாம்பி வைரஸால் ஆபத்து?

உலகில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்கள் ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையே 48,500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2022-ம் ஆண்டு கண்டறிந்தனர்.

இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது

இந்த நிலையில் ஆர்க்டிக் மற்றும் பிற இடங்களில் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் வைரஸ்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆர்க்டிக்கில் பனிக்கட்டிகள் உருகுவதால் ஜாம்பி வைரஸ்கள் வெளியே வர வாய்ப்பு உள்ளது. இதனால் பேரழிவு தரும் உலகளாவிய சுகாதார அவசர நிலையைத் தூண்டக்கூடும் என்றும் புவி வெப்பமடைதல் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையால் உறைந்த பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியதில் இருந்து இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.