Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்திய அணியில் இருந்து அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கம்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீல் எல்கர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம:-

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.

தென்ஆப்பிரிக்கா அணி:

டீன் எல்கர், மார்க்கிராம், ஜோர்சி, ஸ்டப்ஸ், பெடிங்காம், வெர்ரைன், ஜேன்சன், மகாராஜ், ரபாடா, பர்கர், லுங்கி நிகிடி.