Tamilசெய்திகள்

இளைஞர் அணி மாநாடு தேதி குறித்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் இதை அரசு அனுமதித்து உள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. இதனால் ரொக்கப்பரிசு உண்டா? இல்லையா? என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். மேலும் கேலோ இந்தியா நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்க நான் பிரதமரை சந்திக்க உள்ளேன். பிரதமரை சந்திக்கும் போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்து கோரிக்கை வைக்கப்படும். இளைஞர் அணி மாநாடு தேதி குறித்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.