Tamilசெய்திகள்

தெலுங்கானாவில் 28 ஆம் தேதி முதல் சமையல் கியாஸ் ரூ.500 வழங்கப்படுகிறது

தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

அதன்படி வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் தோற்றுவித்த நாளை முன்னிட்டு தெலுங்கானாவில் பெண்கள் பெயரில் உள்ள கியாஸ் இணைப்புகளுக்கு மகாலட்சுமி என்ற புதிய திட்டத்தில் ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.

பெண்கள் பெயரில் கியாஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படும் என தெரியவந்ததால் ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.