காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் – ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.
சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.