’இந்தியன் 2’ பட அறிமுக வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அறிமுக வீடியோவை நாளை மாலை 5.30 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடவுள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் ‘இந்தியன் வீடியோவை எந்திரன் வெளியிடுகிறார்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.