உலகக் கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க பேட்டிங் தேர்வு
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் வெற்றியை தொடரும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.