Tamilசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது. தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.