பள்ளிக்கல்வித்துறையில் 8 இணை இயக்குனர்கள் பணியிடமாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் இன்று ஒரே நாளில் 9 இணை இயக்குனர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 துணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி) க.சசிகலா, பள்ளிக்கல்வி இணை இயக்குனராகவும் (நாட்டு நலப்பணிகள் திட்டம்), அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி) க.சசிகலா, பள்ளிக்கல்வி இணை இயக்குனராகவும் (நாட்டு நலப்பணிகள் திட்டம்), அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) சி.செல்வராஜ், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் செ.அமுதவல்லி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் க.செல்வகுமார், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனராகவும் (மேல்நிலைக்கல்வி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனர் பொ.பொன்னையா தொடக்கக்கல்வி இணை இயக்குனராகவும் (உதவிபெறும் பள்ளிகள்), தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனர் நா.ஆனந்தி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராகவும் (பாடத்திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (பயிற்சி) வை.குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனராகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக (பயிற்சி) இடமாற்றம்.
தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (உதவிபெறும் பள்ளிகள்) செ.சாந்தி, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனராக இடமாற்றம். அதேபோல், பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 6 துணை இயக்குனர்களுக்கு தற்காலிகமாக இணை இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.