Tamilவிளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – 91 பதக்கங்கள் வென்று 4 வது இடத்தில் நீடிக்கும் இந்தியா

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றது.

இந்நிலையில், இன்று காலை வில்வித்தை பெண்கள் ரிகர்வ் பிரிவு, செபக்டக்ரா போட்டியின் பெண்கள் ரெகு பிரிவு மற்றும் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 62 கிலோ பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்திய அணி இதுவரை 21 தங்கம், 33 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. சீனா முதலிடத்திலும், ஜப்பான் 2வது இடத்திலும், தென் கொரியா 3வது இடத்திலும் உள்ளது.