Tamilசினிமா

விஜய் சேதுபதியின் ‘மேரி கிறிஸ்மஸ்’ டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகிறது

பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மேரி கிறிஸ்மஸ்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். ‘மேரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.