தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும். இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.