Tamilசெய்திகள்

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் இருந்த பெண் சிங்கம் இறந்தது

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 18 வயதுடைய மகேஸ்வரி என்ற பெண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. வயது முதிர்வு காரணமாக பெண் சிங்கத்திற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.

இது குறித்து உயிரியல் பூங்கா கண்காணிப்பாளர் நந்தினி சலாரியா கூறுகையில்:-

கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த மகேஸ்வரி என்ற பெண் சிங்கம் குஜராத்தில் உள்ள சக்கார் பாக் உயிரில் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து விசாகப்பட்டினம் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. வனப்பகுதியில் வாழும் சிங்கங்கள் 16 முதல் 18 வயது வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. தற்போது இந்த பெண் சிங்கம் தனது 19-வது வயதில் உயிரிழந்தது. தனது வாழ்நாளில் பெண் சிங்கம் பல லட்சம் மக்களுக்கு காட்சி அளித்து பரவசப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.