ஆசிய போட்டி கால்பந்து – இந்தியா, வங்காளதேசம் இன்று மோதல்
ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன.
ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இதில் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. இருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் காணுகிறது.
கால்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 16 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீன தைபேயை மாலை 5 மணிக்கு சந்திக்கிறது.