Tamilவிளையாட்டு

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் – ஒரு ஓவரில் 32 ரன்கள் எடுத்த சாய் ஹோப்

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்பிடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்பர்டாஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கின. முதலில் பேட்டிங் செய்த கயனா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சாய் கோப் 106 ரன்கள் குவித்தார்.

227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பார்பர்டாஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில் 53 பந்தில் 69 ரன்கள் எடுத்திருந்த அவர் 16-வது ஓவரில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை ஹோப் (41 பந்துகளில்) பதிவு செய்தார்.

மேலும் சிபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்து 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முதலிடத்தில் ஆண்ட்ரே ரசல் 2018-ல் 40 பந்துகளில் ட்ரினிடாட் அணிக்கு எதிராக 100 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.