Tamilசினிமா

‘சரோஜா’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு – பிரபலங்களுடன் கொண்டாடிய இயக்குநர் வெங்கட் பிரபு

முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சரோஜா’. இப்படத்தில் வைபவ், பிரகாஷ் ராஜ், எஸ்.பி.சரண், பிரேம் ஜி, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்ஷன், காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் ‘கோடான கோடி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி இன்று வரையிலும் மக்களை வைப்பாக்கும் ஒரு பாடலாக இருக்கிறது. ‘சரோஜா’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை மும்பையில் படக்குழு கொண்டாடியுள்ளது. இதில் இயக்குனர் பா.இரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.