அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரிங்கியை வீழ்த்தி டியாபோ காலியிறுதிக்கு முன்னேறினார்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவுடன் மோதினார். இதில் டியாபோ 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அமெரிக்காவின் கோகோ காப், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.