Tamilசெய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்ட விலை குறைப்பு

சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.  இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1695 ஆக விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, வீட்டு உபயோகத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தது.