Tamilவிளையாட்டு

உலக கோப்பை தொடருக்கான ஹைடனின் இந்திய அணி – குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹலுக்கு இடமில்லை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி எது? அரைஇறுதிக்கு முன்னேறு வது யார்? என்று முன்னாள் வீரர்கள் பலர் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து உள்ளார். அவர் தேர்வு செய்த அணியில் குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹலுக்கு இடமில்லை.

மேத்யூ ஹைடன் தேர்வு செய்த உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:- ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், வீராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன். யசுவேந்திர சாஹல் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியில் இடம்பெற வில்லை.

இதேபோல இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்த அணியில் யசுவேந்திர சாஹல் இடம் பெறவில்லை. மேலும், திலக் வர்மாவுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை.