Tamilசெய்திகள்

உலகளவில் இந்தியா முன்னேற்றப்பாதையில் நடைபோடுகிறது – பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.

* என் அன்பிற்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு சுதந்திர தினவிழா கொண்டாடுகிறார்கள்.

* உலகம் முழுவதும் இந்தியாவை விரும்புகின்ற மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

* தேசிய சுந்திரத்திற்காக யாரும் பங்களிக்காமல் இருந்திருக்க முடியாது. சுதந்திர தினத்தில் பங்கேற்றவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன்.

* தற்போது இந்தியாவின் பல இடங்களில் மக்கள் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனவேதனையை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற்று, விரைவில் வளர்ச்சி அடைவீர்கள் என உறுதி அளிக்கிறேன்.

* மணிப்பூரில் வன்முறை நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக கொடூமை நடந்துள்ளன. தற்போது அங்கு அமைதி நிலவி வருகிறது. அமைதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய மாநில அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.

* ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாக அந்த ஆட்சிகள் நடத்தின. அந்த காலத்தில் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்ய அனைவரும் தயாராக இருந்தனர். இந்திய விடுதலைக்கான தியாக வேள்வியை நடத்திய வீரர்கள் 1947-ல் வெற்றி பெற்றார்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்து, கனவு நனவானது.

* உலகளவில் அளவில் இந்தியா ஒரு சக்தியாக உருவெடுத்து வருகிறது. உலகிற்கு ஒரு நம்பிக்கை ஒளி ஏற்படுகிறது.

* ஆயிரம் ஆண்டுகளுக்கு போற்றப்படுகிற காலமாக இந்த காலம் அமையும்

* நம் நாட்டில் ஜனநாயகம் ஓங்கி ஒலிக்கிறது

* வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா

* உலகளவில் இந்தியா முன்னேற்றப்பாதையில் நடைபோடுகிறது. நாட்டின் கோடான கோடி நெஞ்சங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள்.

* வரப்போகிற 100 ஆண்டுகளுக்கு நாட்டை சிறந்ததாக்க பணியாற்றி வருகிறோம்.

* தற்போதைய செயல்பாடுகள் அடுத்த நூற்றாண்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும்

* இந்த உலகம் தொழில் நுட்பத்தால் வழி நடத்தப்படுகிறது, தொழில் நுட்பத்தில இந்தியா உலகை வழி நடத்த இருக்கிறது.