Tamilசெய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.