தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 38 கட்சிகள் ஆதரவு – பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்ட தகவல்
காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறுகிறது. இதற்கு போட்டியாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 38 கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
38 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும், மாநில கட்சிகள் கூட்டணியில் இருப்பதை பா.ஜனதா சாதகமாக பார்க்கிறது. மோடி தலைமையில் கடந்த 9 வருடம் நல்லாட்சியை கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி செயல்முறை தான் இது என நட்டா தெரிவித்துள்ளார்.
பீகாரை பொறுத்தவரைக்கும் நிதிஷ் குமார் உடன் கூட்டணி வைத்திருந்தது. நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால், லோக் ஜனசக்தி கட்சி மட்டுமே பா.ஜனதாவில் உள்ளது. சிராக் பஸ்வான் மற்றும் அவரது மாமா ஆகியோரை ஒன்று சேர்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதனால் 6 சதவீதம் பஸ்வான் வாக்குகள் கிடைக்கும் என நினைக்கிறது.
மேலும், உபேந்திர சிங் குஷ்வாகா, முகேஷ் சஹானி, ஜித்தன் ராம் மஞ்சி ஆகியோர் கட்சியை கூட்டணியில் சேர்க்க இருக்கிறது. உத்தர பிரதேசததில் வலுவாக இருக்கும் பா.ஜனதா சுகல்வே பாரதிய சமாஜ் கட்சியை மட்டும் கூட்டணியில் சேர்க்க இருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடனும், மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசிவாத காங்கிரஸ், ஷிண்டுயின் சிவசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பத்தில முக்கிய கவனம் செலுத்தும். வடகிழக்கு மாநிலங்களில ஏழு கட்சிகள் பா.ஜனதா கூட்டணியில் உள்ளது. பவன் கல்யாண், கேரளாவின் தாமஸ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைய இருக்கின்றன.