Tamilசெய்திகள்

செயற்கை நுண்ணறிவு பற்றிய முதல் ஆலோசனை கூட்டம் ஐ.நா சபையில் இன்று நடைபெறுகிறது

செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நியூயார்க் நகரில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.