இரட்டை என்ஜின் அரசை விட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது – பா.ஜ.கவை கிண்ட செய்த அசோக் கெலாட்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை என்ஜின் அரசைவிட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது எனது பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிலர் அவர்களுடைய அரசாங்கத்தை (மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்வதால்) இரட்டை என்ஜின் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு இந்தியன் எப்போதுமே பழுதாகியே உள்ளது. உண்மையான என்ஜின் ராஜஸ்தான் அரசு. அவர்களுடைய இரட்டை என்ஜின் அரசைவிட இந்தியாவில் உள்ள எங்கும் ஒற்றை என்ஜின் ஆன எங்கள் ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. எங்களுடைய ஒற்றை என்ஜின் பாதுகாப்பானது உறுதியானது.
பாரதிய ஜனதா அரசு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால் தான், நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசான இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாயை, அவர்களது கணக்கில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அசோக் கெலாட், இந்த திட்டத்திற்கான சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமையாகவே இருக்கும். வரும் தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனக் கூறினார்.
சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் 21 தலைவர்கள், 42 பொதுச்செயலாளர்கள், ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளர், 121 செயலாளர் மற்றும் 25 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.