புதிய வீடியோ வெளியிட்ட ‘தங்கலான்’ படக்குழு – டையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் விக்ரம்
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் விக்ரமிற்கு மேக்கப் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பெரிய முடி மற்றும் தாடியுடன் விக்ரம், ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.