தெற்காசிய கால்பந்து போட்டி – இந்தியா, குவைத் மோதிய போட்டி டிராவில் முடிந்தது
14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்டத்தின் 90-வது நிமிடம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் இந்திய அணியின் அன்வர் அலி செய்த தவறால் பந்து கோல் வளைக்குள் செல்ல குவைத் அணிக்கு கோல் வழங்கப்பட்டது.
ஆட்ட நேர முடிவில் 1-1 என போட்டி டிராவில் முடிந்தது. ஏற்கனவே இந்தியா மற்றும் குவைத் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.