Tamilசினிமா

வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படம் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகிறது

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது “அநீதி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. ‘அநீதி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், ‘அநீதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.