Tamilசினிமா

ரூ.300 கோடி வசூலை நெருங்கும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படம்

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தடுத்த நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.