Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவேன் – பென் ஸ்டோக் அறிவிப்பு

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-2 என 2015-ல் வீழ்த்தியது. அதன்பின் ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. அதேவேளையில் 2017-18 மற்றும் 2021-22-ல் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வென்றுள்ளது.

பழைய வரலாறு எல்லாம் தேவையில்லை. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘பாஸ்பால்’ எனப்படும் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதை ஆஷஸ் தொடரிலும் கடைபிடிப்போம் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை.

ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினாலும் மிகப்பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனால் ஆஷஸ் தொடரிலும் பந்து வீசுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி குறித்து அவர் கூறுகையில் ”ஆஸ்திரேலியா சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி உள்ளது. அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிக்கு எதிராகவும் வெளிப்படும். இது மிகப்பெரிய சவால் என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இது மிகப்பெரியது என்பது தெரியும்.

பந்து வீசுவது, பேட்டிங் செய்வது மற்றும் பீல்டிங் செய்வது ஆகிய இந்த நோக்கத்தில்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால், வேறு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் அது அழுத்தத்தை கொடுத்துவிடும். நாங்கள் இதற்கு முன் எப்படி விளையாடினோமோ, அதே உத்வேகத்தில் விளையாட விரும்புகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும்” என்றார்.